Nandanaar's Advice
Nandanar is a dalit saint who entered Chidambaram temple and never returned!! It is believed that he merged himself with the supreme lord, Nataraja (the representation of Cosmos as well as the internals of atomic nucleus and their dance).
Before Nandanar's departure to Chidambaram, when his boss realised that Nandanar is not an ordinary person, he asked him advice to realise God. Here is what Nandanar said:
ஐயேமெத்தக்கடினம் - உனக்கடிமை - ஐயேமெத்தகடினம்
பொய்யாதபொன்னம் பலத்தையாயிருக்குமிடம்
நையாதமனிதர்க்கு உய்யாதுகண்டுகொள்ளும் (ஐயே) //{நையாத - உருகாத, உய்யாது - செல்லாது/செலுத்தாது}
பாலகிருஷ்ணண்பணிந்திடுஞ் சீலகுருசிதம்பரம்
மேலேவைத்த ஆசையாலே காலனத்துப்போவே னென்று //{காலனத்து - எமன் அற்று}
சாத்திரம் நல்ல - ஷேத்திரம் நிற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு //{ஷேத்திரம் - ஆன்மா, நிற்பாத்திரம் - உடம்பின்மை, நேத்திரம் - கண்}
வாசியாலேமூலக்கனல் வீசியேசுழன்றுவரப்
பூசைபண்ணிப்பணிந்திடு மாசறக்குண்டலியைவிட்
டாட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே - இந்த
மானாபிமானம்விட்டுத் தானாகி நின்றவர்க்குச் //{அபிமானம் - தன்மதிப்பு}
சேனாதிபதிபோலே ஞானாதிபதியுண்டு
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோதுமே அங்கே
கங்கையறவேநின்று பொங்கிவரும்பாலுண்டு
அங்கமிளப்பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே
நில்லுமே ஏதுஞ் சொல்லுமே ஞானஞ் செல்லுமே - இந்த
அஷ்டாங்கம்பண்ணினாலும் நெட்டாங்குபண்ணியது
கிட்டாதுகிட்டவர வெட்டாதுமுட்டியது
பாயுமே முனை தேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமே வேத
மந்தரத்திலேபோடு மெந்தரத்திலே பார்க்குந்
தந்திரத்திலேயுமில்லை அந்தரத்திலே அவ
தானமே அது தானமே பலகீனமே பேசா மோனமே - அந்த
முப்பாழுந்தாண்டிவந்து வப்பாலே நின்றவர்க்கு //{முப்பாழ் - ஆணவம், கன்மம், மாயை}
இப்பார்வை கிடையாது வப்பாதிருநடன
மாடுவார் தாளம் போடுவார் அன்பர் கூடுவார் இசைபாடுவார் இதை
கண்டாருங்கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
யண்டரண்ட கோடியெல்லா மொன்றாய்ச்சமைத் திருக்கு
மல்லவோ அதைக் கொல்லவோ பறையன் சொல்லவோ அங்கே செல்லவோ நேரமாகு தல்லவோ
Comments
Post a Comment